ஹட்டன் நகர் பஸ் தரிப்பிடத்திலுள்ள பொது மலசலகூடத்தில், அதிகளவு கட்டணம் அறிவிடப்படுவதாக, பயணிகள், சாரதிகள் மற்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கிவரும் இந்த மலசலகூடத்தில், கட்டண அறவீடு, நேரத்துக்கு நேரம் மாறுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இங்கு கட்டண விவரம் அடங்கிய அறிவித்தலும் காட்சிப்படுத்தபடவில்லை என்றுச் சுட்டிக்காட்டப்படுவதுடன, இது தொடர்பில், ஹட்டன்-டிக்கோயா நகரசபை கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.