தனிவீட்டுத்திட்டத்தை பரீசிலனைக்கு உட்படுத்திய அரசாங்க திணைக்கள பொறியியலாளர்கள்!!

0
283

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மலையக தோட்டபகுதியில் முன்னால் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்பட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் கீழ் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு முன்னெடுக்கபட்டு வந்த 184தனி வீட்டு திட்டத்திற்கு அடிகல் நாட்டபட்டு தற்பொழுது 42வீடுகள் மாத்திரம் அறைகுறையுமாக புணரமைக்டகபட்டுள்ளமை தொடர்பிலும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு மற்றும் கீழ் தோட்டபகுதியில் மொத்தம் 55வீடுகளையும் பரீசீலனை செய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய அரசாங்க திணைக்கள பொறியியலாளர்கள் வரவழைக்பட்டு 29.11.2018.வியாழக்கிமை மலையகத்தில் முன்னெடுக்கபட்டுள்ள தனி வீட்டு திட்டங்கள் பரீசிலனை செய்யபட்டது

இதன் போது மலையகத்தில் தற்போது பொகவந்தலாவ கொட்டியாகலை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவு மற்றும் கீழ் பிரிவு ஆகிய தோட்டபகுதிகளில் பெறுந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் அமைக்கபட்ட வீடமைப்பு திட்டங்கள் முறையாக மேற்கொள்ள படவில்லை எனவும் கொட்டியாகலை பகுதியில் 184 தனிவீட்டு திட்டத்தில் 42இரண்டு வீடுகள் மாத்திரம் அமைக்கபட்டுள்ளதாகவும் அதில் சுவர்களில் பாரிய வெடிப்புகள் காணபடுவதாகவும் வீடமைப்பு திட்டத்தில் உள்ள மலசல கூடத்திற்கென வெட்டபட்ட குழிகளின் ஆழம் 08அடிக்குள் அமையபெற்றிருக்க வேண்டும் எனவே இங்கு தோன்றபட்டுள்ள குழிகள் அனைத்தும் 15அடி ஆலம் கொண்டது இவ்வாறு காணபடுகின்றமையால் இப்பகுதியில் உள்ள தனிவீட்டுத்திட்டங்கள் தாழ்இறங்கும் சந்தர்ப்பங்கள் காணபடுவதாக அரசாங்க திணைக்கள பொறியியலாளர்கள் தெரிவித்தனர்

இதேவேலை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவு மற்றும் கீழ் பிரிவு தோட்டபகுதியில் அமைக்கபட்ட 55தனிவீட்டு திட்டமானது ஒரு தனி வீட்டு திட்டத்திற்கான அடித்தளம்மானது பூமியில் இருந்து ஒரு அடி உயரத்திற்கு அடித்தளம் போடப்பட்டிருந்தல் வேண்டும் ஆனால் இங்கு 08அங்குளம் மாத்திரம் போடபட்டிருப்பதாகவும் எதிர் காலத்தில் இது போன்ற வீடமைப்பு திட்டங்கள் மக்களுக்கு உகந்தாக காணபடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். தனி வீட்டு திட்டத்திற்கு பொறுத்தபட்டிருக்கும் கூரைதகடுகளும் தரம் குறைவான தகடுளே பொறுத்தபட்டிருப்பதாகவும் இதன்காரணமாகவே இந்த கூறைதகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்
இன்று இடம் பெற்ற இந்த மேற்பார்வையின் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ் நோர்வூட்பிரதேசசபையின் தலைவர் கே.ரவிகுழந்தைவேல் நோர்வூட்பிரதேசசபையின் கெர்க்கஸ்வோல்ட் தொகுதி உறுப்பினர் எம்.சரோஜா பெறுந்தோட்ட மனிதவள அபிவருத்தி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் சமூகமளித்து இருந்தமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here