கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு பல பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.அந்தவரிசையில் செல்வக்கந்தை தமிழ் வித்தியாலயத்திலும் பிரியாவிடை நிகழ்வொன்று நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
11 வருடங்களாக பாடசாலையில் கல்விப்பயின்று உயர்தரத்தை நோக்கி நகர்வதற்கான தடைத்தாண்டல் பரீட்சையே உரிய முறையில் பரீட்சை எனும் தடையை தாண்டினால் அனைவரும் மீண்டும் உயர்தரத்தில் ஒன்றுக்கூடலாம் எனும் ஊக்கப்படுத்தும் பேச்சுகள் அதிபர்,ஆசிரிகளால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன
மேலும் பரீட்சை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதோடு மாணவர்கள் தான் பாடசாலை காலத்தில் இருந்த அனுபவங்களையும் ,பாடல்கள்,பேச்சுகள் ,நடனங்கள் போன்ற நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டதோடு கண்கள் கலங்கிய நிலையில் பிரியாவிடை நிகழ்வு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்