புலமைப்பரீட்சையில் முன்னேற்றகரமான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு!!

0
171

ஒரு பாடசாலைக்கு முதற்கட்ட பெருமையை தேடித்தருவது புலமைப்பரிசீல் பரீட்சை. அது பெற்றோர்களுக்கு பெருமை தேடித்தரும் பரீட்சைகளில் மிக முக்கிய பரீட்சையாகவும் மாற்றமடைந்துக்கொண்டு வருகின்றது.சமீபகாலமாக புலமைபரிசீல் பரீட்சையில் சித்தியடைவோரின் தொகையும் முன்னேற்றகரமான புள்ளிகளை பெரும் வீதமும் அதிகரித்து வருகின்றது.

அந்தவரிசையில் நு/செட்.தமிழ் வித்தியாலயத்தின் புலமைபரிசீல் வாயிலாக பெருமைத்தேடித்தந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் வைபவம் இன்றைய தினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்தோர் மற்றும் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை சான்றிதழ்கள் மூலம் கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here