ஒரு திறமைசாலியை ஊக்கப்படுத்தும் விடயங்களில் சான்றிதழ்கள் வழங்குவது பெரும் பங்கு வகிக்கின்றது.தொடர்ந்தும் பல சாதனைகளை தொட அடிப்படை கைத்தட்டல்களும் சான்றிதழ்களுமே அந்தவகையில் இன்றைய தினம் பல மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக நு/ஹெதர்செட் தமிழ் வித்தியாலயம் பரிசளிப்பு விழா ஒன்றை கொண்டாடியது.பாடசாலை மட்டம்,கோட்ட மட்டம்,வலைய மட்டம்,மாவட்ட,மாகாண மட்ட ரீதியில் தன் திறமையை வெளியாட்டிய மாணவர்களை சான்றிதழ்கள் மூலம் ஊக்கப்படுத்தினர்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பங்குக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்