காசல்ரி நீர்தேக்கத்தில் கலந்துள்ள எண்ணெயைப் பகுப்பாய்வுக்குட்படுத்தவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.நோட்டன் விமல சுரேந்திர மின் நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்தேக்கத்தில் கலந்துள்ள எண்ணெய் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து பகுப்பாய்வாளர்கள் களத்திற்கு வந்து நேற்று ஆய்வு செய்தனர்.
கடந்த ஒருவார காலமாக நீர்தேக்கத்தில் நீரில் ஒரு விதமான எண்ணெய் கலந்திருந்ததுடன் நீர் மாசடைந்து நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாசடைந்திருந்தது. இந்நிலையில் ஊடகங்களில் செய்தி வெளியாதையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டத்துடன் நீரில் எண்ணெய் கலந்தமை தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா