கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுதுள்ள பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதனூடாக விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, விமான நிலையத்தில் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாகவும் விமான நிலையத்திலுள்ள இலங்கை விமானப்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.