தொண்டமான் எங்களை காட்டி கொடுத்து விட்டார்- பொகவந்தலாவ மக்கள் ஆவேசம்!!

0
198

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி பொகவந்தலாவ பகுதியில் பத்தாவது நாளாகவும் 13.12.2018.வியாழகிழமை காலை 09 மணியில் இருந்து ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

இந்த ஆர்பாட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எங்களை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுமாறு கோரி ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று தருவதாகவும் கூறினார் ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தோட்ட தொழிலாளர்களை திடிர் என பணிக்கு திரும்புமாறு ஊடகங்களின் ஊடாக அறிக்கை விட்டு தோட்ட தொழிலாளர்களாகிய எங்களை ஆறுமுகன் தொண்டமான் எமாற்றிவிட்டதாக கூறி ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியினை மறித்து டயர்களை எரித்தும் பொகவந்தலாவ ஜேப்பஸ்டன் பகுதியில் தோட்டமக்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

இந்த ஆர்பாட்டத்தின் காரனமாக ஹட்டன் பொகவந்தலாவ மற்றும் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து சிலமணி நேரம் பாதிக்கபட்டது கடந்த காலங்களில் ஆறுமுகன் தொண்டமான் கூறினார் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வளங்கபடா விட்டால் பாராளுமன்ற பதவியில் இருந்து வெளியேறபோவதாக கூறிய அவர் நாட்டில் திடிர் என ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவினை வழங்கி அமைச்சி பதவில் அமர்ந்து கொண்டு புதிய பிரதமர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று கொடுப்பார் என தெரிவித்து தற்பொழுது நாட்டில் அரசாங்கம் மற்றும் அமைச்சரவை இல்லாமல் இருக்கின்ற போது தோட்ட தொழிலாளர்களை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுத்தி தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேலை இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனிதிகாம்பரம் ஆகிய இருவரும் பெறுந்தோட்ட தொழிலாளர்களை வழமைபோல் பணிக்கு திரும்பும் மாறு ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு அறிவுருத்தல் வழங்கபட்ட போதிலும் பத்தாவதுநாளாகவும் பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பணிக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெம்பியன் லோய்னோன் பெற்றோசோ எல்டொப்ஸ் கொட்டியாகலை ஜேப்லடன் மற்றும் களனிவல பெருந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான ரோப்கில் போனோகோட் சிங்காரவத்த இன்ஞஸ்ரி போடைஸ் பட்ல்கல புளியாவத்த போன்ற தோட்டபகுதியில் உள்ள தொழிலாளர் தொழிலுக்கு செல்லாமல் பணிபுரக்கனிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

DSC06749 DSC06747

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here