தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம்

0
179

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இளைஞர்கள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டமானது சற்று நேரத்திற்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக்கோரி மலையக இளைஞர்கள் நால்வர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

குறித்த போராட்டத்தில் கணேசன் உதயக்குமார், கந்தையா அசோக் குமார், கனகரத்தினம் ராஜா மற்றும் வீரக்குமார் மனோச் ஆகிய நான்கு மலையக இளைஞர்களுமே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஐந்தாவது நாளான இன்று குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்துள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.அத்தோடு எமது மக்களுக்கு 1000 ரூபாவை நாளாந்த சம்பளமாக வழங்காத பட்சத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here