ஹட்டனை சேர்ந்த இரு இளைஞர்கள் நாவலப்பிட்டி பகுதியில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி பலி!!

0
208

நாவலப்பிட்டி பகுதியில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நாவலப்பிட்டி – மாபாகந்த பகுதியில் இன்று இடம்பெற்ற உறவினரின் திருமண வைபவத்திற்கு ஹட்டன் பகுதியை சேர்ந்த மூவர் சென்றிருந்தனர்.

திருமண வைபவத்தின் பின்னர் கலபட ஓயாவிற்கு மூவரும் குளிக்கச்சென்ற வேளையில் நீரிழ் மூழ்கியுள்ளனர்.

எனினும், மூவரில் ஒருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – ஹிஜ்ராபுரம் பகுதியை சேர்ந்த அப்துர் ரஹ்மான் மற்றும் முஹம்மட் முக்தார் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

death-1516186933-1525157925 49187965_296636580973411_1925874785909211136_n

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here