லிந்துலை கவுலஹன புனித பிரான்ஸிஸ் அசிசீயார் பங்கு ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணியளவில் பங்கு தந்தை அருட்திரு டொஸ்மின் ராஜ் தலைமையில் நத்தார் கூட்டு திருப்பள்ளி நடைபெற்றது.
இதில் விஷேடமாக அருட்திரு அந்தனி குருசேவியர் அவர்களால் நத்தார் கூட்டு திருப்பள்ளி ஒப்புகொடுக்கபட்டது. இதில்
45 தோட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கிருஸ்தவர்கள் கலந்துகொண்டனர்
திருப்பள்ளியின் போது வடக்கு கிழக்கு பகுதியில் தற்போது கால நிலை சீர்கேடுகள் காரனமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடிகொண்டியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் முறையாக கிடைக்கவேண்டும் நிலையான அரசாங்கம் இல்லாத காரனத்தினால் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இதில் இருந்து விடுபடுவதற்கு நல்ல பலன் கிடைக்கவும் அருட் தந்தை அந்தனி குருசேவியர் ஆராதனையின் போது இதனை தெரிவித்ததோடு இவ்வாறான நிலையில் தான் யேசுபாலகன் பிறந்துள்ளான் குடும்பத்தில் உள்ள அனைவரும் அமைதியுடன் ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடந்துகொள்ளவேண்டும் அப்போதுதான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என இவர் தனது திருப்பள்ளியில் தெரிவித்தார்
இதேவேளை விஷேட ஆராதனையில் கலந்துகொண்ட கிருஸ்தவர்களுக்கு தனது வாழ்த்துசெய்தியும் தெரிவித்தார்
அக்கரப்பத்தனை நிருபர்