நோர்வூடில் 30அடி பள்ளத்தில் குடைசாய்ந்த லொறி – படுகாயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி….

0
126

கண்டியில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு கோழி ஏற்றிவந்த லொறி வண்டி ஒன்றுஹட்டன் பொகவந்தலாவ பிரதான விதியின் நோர்வூட் கிளங்கன் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 30அடிபள்ளத்தில் குடைசாய்ந்ததில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 02.01.2018புதன்கிழமை விடியற்காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து பொகவந்தலாவ சென்ஜோன் டிலரி பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கோழிகளை ஏற்றி வந்த லொறிவண்டி அதிகவேகத்தின் காரணமாக கட்டுபாட்டை இழந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த லொறிவண்டியில் இரண்டு பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் சாரதிக்கு மாத்திரம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

1 (3) 1 (5)

எனவே காயங்களுக்கு உள்ளான சாரதி தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ்,  எம் கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here