மலையக இளைஞர் யுவதிகள் கல்வியை முடித்துக்கொண்டு அரசாங்க நிறுவனங்களில் வழங்கப்படும் தொழில் பயிற்சிகளில் கலந்துக்கொண்டு தொழில்வாய்ப்புகளை பெறவேண்டும்….

0
215

மலையக இளைஞர் யுவதிகள் பாடசாலை கல்வி முடிந்த கையோடு நேரடியாக தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்காது அரசாங்க நிறுவனங்களில் வழங்கப்படும் தொழில் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்டு தொழில் வாய்ப்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியாக 25000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்பயிற்சி திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சிகள் பிரதி அமைச்சர் கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் இத்தகைய தொழில் பயிற்சிகள் தொடர்பான விபரங்கள் தமிழ் மொழியில் வெளியிடப்படுவது குறைவு. அதே நேரம் தமிழ் மொழி மூலம் நடாத்தப்படுவதும் குறைவு. இதுவும் தமிழ் மொழிமூல மலையக மாணவர்கள் இதில் பங்கு பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இதனை சரிசெய்ய துறைசார்ந்த அமைச்ரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

டி, சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here