தோட்ட தொழிலாளர்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் போதாது நியாயமான சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் . போகாவத்தையில் அமைச்சர் பழனிதிகாம்பரம் தெரிவிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 600ரூபா போதாது நியாயமான
சம்பளத்தை பெற்றுகொடுக்க பட வேண்டும் ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள
விடயத்தில் 600ரூபாவில் இருந்து 620ரூபா அடிப்படை சம்பளத்தில்
கைச்சாத்திட்டு தோட்ட தொழிலாளர்களை காட்டி கொடுக்க முயற்சி செய்வதாக
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட
உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்
தெரிவித்தார்.
10.01.2019.வியாழக்கிழமை பத்தனை போகாவத்த மற்றும் மவுன்ட்வோனன் தோட்டபகுதியில் 105 தனிவீட்டுத்திட்டத்தினை திறந்துவைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழவ்pல் மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் அவர்களின் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு தனிவீட்டு
திட்டத்தினை திறந்து வைக்கபட்ட நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மத்திய மாகாணசபை
உறுப்பினர்களான சிங்பொன்னையா எம்.உதயகுமார் சோ.ஸ்ரீதரன் எம்.ராம் இளைஞர்
அணி தலைவர் பா.சிவநேசன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது மேலும் உறையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்ட
தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும்
தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானோடு
கலந்துரையாடி விட்டு வந்து நவின் திஸாநாயக்க கூறுகிறார் ஆயிரம் ரூபா
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது அடிப்படை சம்பளம் 600ரூபா தான்
வழங்க முடியும் என கூறுகிறார்.
ஆனால் எதிர் கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் என பாராளுமன்றில் குரல் ஏழுப்பியது வரவேற்க்கதக்க விடயம் அதன் காரணமாகத்தான் நான் கூறுகின்றேன் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான
சம்பளம் வேண்டும் என்பதே எனது கோரிக்கை
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பின் கதவு வழியாக வந்தவர்கள் அமைச்சி
பொறுப்பை ஏற்று கொண்டு 25வாகனங்களில் வந்து போனது மாத்திரமே மக்களுக்கு
ஒன்றுமே செய்யவில்லை அண்மையில் டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்ட பகுதியில்
தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க கடந்த 04ம்
திகதி ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேலையில்ஐம்பது நாள் அமைச்சராக
இருந்தவர்கள் கூறுகிறார்கள் ஜனாதிபதியோடு கலந்துரையாடி வீடுகளை அமைத்து
கொடுப்பதாக மக்கள் மத்தியல் பொய்யான வாக்குறுதினை வழங்கி வருகின்றனர்.
நான் ஒன்று கேட்கின்றேன் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தை
ஜனாதிபதியோடு கலந்துரையாட ஜனாதிபதியிடம் அனுமதி கிடைக்காதவர்கள் போடைஸ்
30ஏக்கர் தோட்டமக்களுக்கு எப்படி வீட்டு திட்டத்தினை கொண்டு வருவார்கள்??
ஆனால் நாங்கள் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கமாட்டோம்
ஆகவே நாட்டில எற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக மலையகத்தில்
முன்னெடுக்கபட்ட அபிவித்தி திட்டங்கள் தடையாகி இருந்தன. ஆனால் ஒருவர்
பெற்றோல் கேனை ததூக்கி கொண்டு பாராளுமன்றத்திற்க்கு வந்தவர் இன்று
கூறுகிறார் எங்களிடம் பொறிமுறையை கேட்கிறார். பொறிமுறை வேண்டுமானால்
வெளியில் வாருங்கள் நாங்கள் பொறிமுறை தருகிறோம் என குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)