மஸ்கெலியா நகரில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த சிறய ரக பார ஊர்தி ஒன்றும் அட்டனில் இருந்து நல்லதண்ணி பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சிறிய ரக பாரஊர்தி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பபவம் 11.01.2019.வெள்ளிகிழமை அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இந்த விபத்தின் காரணமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் விபத்துக்குள்ளான சிறிய ரக பார ஊர்திக்கு மாத்திரம் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது
இதேவலை அட்டனில் இருந்து நல்லதண்ணி பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திகொண்டு செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிக வேகம் காணமாகவும் அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
குறித்த பகுதியில் அதிகளவிலான விபத்துக்கள் இதற்க்கு முன்பும் இடம் பெற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ், எஸ். கிஷாந்தன்