நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.