தயா மாஸ்டர் கைதாகி பிணையில் விடுதலை!

0
146

இலங்கை அரசின் செல்லப்பிள்ளையான தயா மாஸ்டர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

எனினும் விசாரணை எதற்கென தெரியாத போதும் அவர் தற்போது பணியாற்றும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் என கூறப்படுகின்றது.

முன்னதாக இறுதி யுத்த காலப்பகுதியில் ஜோர்ஜ் மாஸ்டர் சகிதம் சரணடைந்த அவர் தொடர்பிலான விசாரணை தொடர்கின்ற போதும் குற்றச்சாட்டுக்களினிலிருந்து ஜோர்ஜ் மாஸ்டர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மற்றும் புலனாய்வு கட்டமைப்பின் முன்னாள் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோர் தமது பெருமளவு பணத்தை ஜரோப்பிய நாடுகளில் முதலிட இத்தொலைக்காட்சியைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவது தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here