உலகப் புகழ்பெற்ற “ரெக்கே” இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி (Alpha Blondy) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி அபுதாபியிலிருந்து இன்று புதன்கிழமை (16) அதிகாலை 02.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஆல்ஃபா பிளாண்டி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விமானப்படை மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.