ARS INTERNATIONAL ORCHESTRA வழங்கும் உலகசாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி

0
201

ARS INTERNATIONAL ORCHESTRA வழங்கும் உலகசாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நேற்று பெப்ரவரி 17 ஆம் திகதி ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தென்னிந்திய இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் சகோதரியும்,பின்னணி பாடகியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரிஹானா மற்றும் சர்வதேச தலைவர் உலக தமிழர் பன்னாட்டு கலைக்கூடம். ரஸ்மிரூமி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகின.

குறித்த நிகழ்வில் ஏ.ஆர் ரிஹானா ரஸ்மிரூமி அவர்களினதும் பாடல்கள் இடம்பெற்றதுடன்;. மலையகத்தில் பாடுவோர் பாடலாம் போட்டி நிகழ்சிக்கு சிறந்த பாடகரை தெரிவு செய்வதற்காக நடுவராகவும்; ஏ.ஆர்.ரிஹான கடமையாற்றினார். இதன் போது கலந்து கொண்டவர்களின் பாடல்கள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் கருப்பையா பிள்ளை பிரபாகரன் அவர்களின் தனி இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன.

இதன் போது மலையக குயில் அசானியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட மலையகம் 200 நிதியம் என்ற அமைப்பின் மூலம் 50 ஏழை மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபா வீதம் நிதி வைப்பில் இட்டு வருவதற்காக அசானி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு இந் நிகழ்வில் விசேட தேவையுடைய யுவதி ஒருவருக்கு சக்கர நாட்காலியும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.குறித்த நிகழ்வில் கல்வி ராஜங்க அமைச்சர் அரவிந்தகுமார், முன்னாள் கொழும்பு மேயர் அசாத்சாலி, அகில இலங்கை கிறிஸ்துவ ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசை கல்லூரிக்கான இலங்கைக்கான தூதுவருமான கலாநிதி சந்துரு பெர்ணாண்டோ உட்பட உலக புகழ்பெற்ற கலைஞர்கள் அரசியல் பிரதிநிதிகள் உட்பட உள்ளுர் கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here