Bangkokன் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் மூன்று மணித்தியாலத்தின் பின்னரே தீயணைப்பு வீரர்களினால் தீயை கட்டப்பாட்டக்குள் கொண்டுவர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல் தொடர்பில் Bangkok பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CAPITAL
NEWS
SRILANKA