முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அவர், தேசிய வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் அவர் தனது வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் எனவும், வீட்டில் ஓய்வெடுக்கும் காலத்தில் அவரது குடும்ப வைத்தியர்களால் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுவார் என்றும் அக்கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வௌியிட்டுள்ள படத்தில் பிரித்தானிய முன்னாள் பிரதமரும் எழுத்தாளருமான Boris Johnson எழுதிய புத்தகத்துடன் வௌியேறிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.