Clean Sri Lanka திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட முதல் ரயில் நிலையமான தல்பே ரயில் நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு (2026-01-02 ) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் “Dream Destination”திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் Clean Sri Lanka திட்டத்தால் தனியார் துறையின் ஆதரவுடன் அரச – தனியார் கூட்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம், நாட்டில் விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் ஒரு சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை உருவாக்குவதாகும்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, ஹபராதுவ பிரதேச சபையின் தலைவர் ஹர்ஷ புஞ்சிஹேவா, Clean Sri Lanka செயலகத்தின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர்கள், “Dream Destination”திட்ட பணிப்பாளர் மகேஷி குணரத்ன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகள், ரயில்வே பொது முகாமையாளர்
ரவீந்திர பத்மபிரிய மற்றும் அதிகாரிகள், Star Garments (pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ. சுகுமாரன், செயல்பாட்டு பணிப்பாளர் ஜீவன் சேனாரத்ன, NIO Engineering அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லக்மின சமரசேகர மற்றும் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.





