Ever Ace கொள்கலன் கப்பல் 5-ஆம் திகதி கொழும்பு துறைமுகதில் நங்கூரமிட உள்ளது

0
195

உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு துறைமுகதில் நங்கூரமிட உள்ளது.
400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமந்துகொண்டு நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக வந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.

உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும். அதிலே தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here