FA Cup இறுதி போட்டி : மென்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொள்ளும் மென்செஸ்டர் சிட்டி அணி

0
238

மேன் யுனைடெட் அணி புதிய பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக் (Erik ten Hag) தலைமைத்துவத்தின் கீழ் கராபோ கோப்பையை (Carabao Cup) கைப்பற்றியதுடன் FA Cup இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது
இன்றைய தினம் நடைபெறவுள்ள FA Cup இறுதி போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் (Manchester United)அணியும் மென்செஸ்டர் சிட்டி (Manchester City )அணியும் மோதவுள்ளன.

குறித்த போட்டி வெம்ப்லி ஸ்டேடியதில் (Wembley Stadium) இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஷெஃபீல்ட் யுனைடெட் (Sheffield United) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மென்செஸ்டர் சிட்டி (Manchester City ) அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரைட்டன் (Brighton) அணியை பெனால்டி முறையின் அடிப்படையில் 7-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மென்செஸ்டர் யுனைடெட் அணி (Manchester United) இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

இந்த பருவ காலத்தில் மேன் யுனைடெட் அணி புதிய பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக் (Erik ten Hag) தலைமைத்துவத்தின் கீழ் கராபோ கோப்பையை (Carabao Cup) கைப்பற்றியதுடன் FA Cup இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் மென்செஸ்டர் சிட்டி (Manchester City) அணி பிரீமியர் லீக் (Premier League) கோப்பையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here