புலி இனத்தை சேர்ந்த உயிரினம் சுழிபுரத்தில் பிடிபட்டது….

0
197
சுழிபுரம் சவுக்கடி கடற்பகுதியில் அரிய வகை உயிரினம் ஒன்று மீனவரின் வலையில் சிக்குண்டுள்ளது.
சிறுத்தைப் புலி வகையைச் சேரந்த இந்த உயிரினம் உயிருடன் உள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அவர்களால் வன உயிரினங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றது.
சுழிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்ற மீனவர் இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்றார். அவரது மீன் கூட்டை இழுத்துள்ளார். அதன் எடை கனமாக இருந்துள்ளது.
அதனை அவதானித்த போது, சிறுத்தைப் புலி போன்ற ஒன்று காணப்பட்டுள்ளது.
அதனை கரைக்கொண்டு வந்த மீனவர், சக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் அறிவித்தார்.
கடற்படையினரால் வன உயிரினங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வருகைக்காக மீனவர் காத்திருக்கிறார்.

எஸ் .சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here