பெருந்தோட்ட முகாமையார்களே நீங்களும் நாங்களும் அனுவிக்கும் சுகங்களை தோட்ட மக்கள் அனுபவிக்கவில்லை அதனை அவர்களும் அனுபவிக்க நாம் ஒன்றினைவோம்_ திகாம்பரம் தெரிவிப்பு…

0
172
பெருந்தோட்ட முகாமையார்களே நீங்களும் நாங்களும் அனுவிக்கும் சுகங்களை தோட்ட மக்கள் அனுவவிக்கவில்லை அதனை அவர்களும் அனுபவிக்க நாம் ஒன்றினைந்து செயற்படுவோம் என்று கூறுகின்றார் மலைநாட்டு புதிய கிராமங்கள்¸ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பெருந்தோட்ட மக்களுக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள்¸ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் வீட்டுத்திட்டம் முறையாக முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்ட முகாமையாளருக்கும் தோட்ட அதிகாரிகளுக்கும் பயனாலிகளுக்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக தெளிவுப்படுத்தும் நிகழ்வு இன்று (07) ரதல்ல மைதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தரிவித்தார்.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமனி¸ பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் உயர் அதிகாரிகள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்ட முகாமையாளருக்கும் தோட்ட அதிகாரிகளும் உத்திஸ்யோகஸ்த்தர்களும் தோட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து உரையாற்றிய மலைநாட்டு புதிய கிராமங்கள்¸ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நான் பெருந்தோட்ட தொழிலாளின் பிள்ளை என்ற வகையிலும் லயத்தில் வாழ்ந்தவன் என் வகையிலும் தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாறு முற்றிலும் தெரிந்தவன் என்ற நிலையில் இந்த மக்களின் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க விரும்புகின்றேன். தற்போது பெருந்தோட்ட முகாமையாளர்களும் அதிகாரிகளும் நாங்களும் அனுவிக்கும் சுகங்களை தோட்ட மக்கள் அனுவவிக்கவில்லை  அதனை அவர்களும் அனுபவிக்க தோட்ட முகாமையும்  நாமும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். நான் ஏனையவர்கள் போல் உங்களை ஏசவோ பேசவோ திட்டவோ இல்லை என்னுடன் இனைந்து இந்த மக்களின் வாழ்வில் ஒளிவீச செயற்படுவோம் என்றே கூர வந்தேன். இவ்வாறு நாம் அனைவரும் சேர்ந்து  இந்த மக்களுக்கு நாம் சேவை செய்யாவிட்டால். இங்குள்ளவர்கள் எதிர்காலத்தில் இடம் பெயர்ந்து கொழும்பு போன்ற இடங்களுக்கு சென்று விடுவர் அப்போது தோட்டங்களை நிர்வகிக்க முடியாது. அதனால் நாம் அனைவரும் ஒன்றினைந்து அந்த மக்களின் வளர்ச்சிக்கு செயற்பட வேண்டும். அதற்கு இவர்களக்கான தனி வீட்டுத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த வீடுகளை கட்டுவதற்கு உங்களது ஒத்துழைப்பு அதிகமாக வேண்டும். பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் இந்திய உதவியின் ஊடாக மேலும் 10.000 வீடுகள் கட்டபட உள்ளதை துரிதபடுத்த சொல்லி உள்ளார். ஆதலால் எமது வேலைத்திட்டம் அதிவேகத்தில் முன்னெடுக்கப்படும் இதன் போது யார் யார் என்ன சொன்னர்லும் என்ன செய்தாலும் இந் திட்டத்திற்கு பொருப்பான அமைச்சர் என்ற வகையில் துணிந்து செயற்பட்டு செய்து முடிக்பேன் என்று கூறினார். என கூறினார்.
பா. திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here