2021 (2022) ஆண்டின் கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளை வியாழக்கிழமை நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
முன்னராக பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலியான ‘DOE’ க்கு பிரவேசித்த விண்ணப்பத்தை இணைய வழியாக சமர்ப்பிக்கும் முன் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்குமாறு ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.