GO GOTA HOME அட்டனில் போராட்டம்

0
125

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் (18.04.2022) இரண்டாவது நாளாக இன்றும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.

ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று (17.04.2022) இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.

அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தின் போது அட்டன் மல்லியப்பு சந்தியில் GO GOTA HOME கிராமத்தின் கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here