Gowers Corp பணமோசடி வழக்கில் இருந்து நாமல் விடுதலை

0
192

வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, உயர் நீதிமன்ற நீதிபதி, சாட்சியங்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை எனக் கூறியிருந்தார்.
Gowers Corporate Services (Pvt) Limited தொடர்பான பணமோசடி வழக்கில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 02) விடுதலை செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, உயர் நீதிமன்ற நீதிபதி, சாட்சியங்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை எனக் கூறியிருந்தார்.

தனிப்பட்ட வெறுப்பின் விளைவாக பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளததாகவும் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here