அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில இலங்கைக்கு IMF கடன் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியமை ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்யும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்துள்ளமை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கிடைத்த மிக பெரிய வாய்ப்பாகும். அதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து முதற்கட்டமாக IMF கடன் உதவி திட்டத்தை கிடைக்கப் பெற்றுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் IMF கடன் திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்வாதார நிலைமையில் சுமூகமான மாற்றத்தை ஏற்படுத்த கட்டம்கட்டமாக முயற்சி மேற்கொள்ளும் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.