ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்கள் என கூறப்படும் நான்கு இலங்கை நபர்கள் இந்தியாவிற்கு கடந்த சில நாட்களாக பயணம் செய்து குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சந்தேக நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும், அத்துடன் அவர்கள் உண்மையில் ISIS நெட்வொர்க்குடன் தொடர்புள்ளதா என்பதை ஆராயவும் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்துவார்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.