JEDB நிறுவனத்துக்கு செந்தில் தொண்டமான் விடுத்த கடும் எச்சரிக்கையையடுத்து மொனராகலையில் வெடித்தது முதல் போராட்டம்!

0
154

தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்காது நிதி பற்றாக்குறையென இழுத்தடிப்பு செய்துவந்த அரசுக்கு சொந்தமான JEDB நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் கடும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் சம்பளத்தைவழங்க தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் தலைவர், இயக்குனர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

செந்தில் தொண்டமானின் இந்த கடும் உத்தரவை தொடந்து JEDB நிறுவனத்துக்கு உரித்தான பல தோட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திவருவதுடன் முதல் கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் கும்புகன் பிரிவுக்கு சொந்தமான குமாரவத்த தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தோட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் செய்த வேலைக்கான சம்பளம் கடந்த 10ம் திகதிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இன்னமும் வழங்கப்படவில்லை. JEDB நிறுவனத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக சம்பளம் வழங்கவில்லையென உயர் அதிகாரிகள் தொழிலாளர்களிடம் கூறுகின்றனர். அலட்சிய போக்கில் உள்ள அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கும் செல்ல தயாராக உள்ளதாக அவர் கூறியிருந்த நிலையிலேயே அவருடன் இணைந்து போராட JEDB நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களும் கைகோர்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here