‘MISS TEEN TOURISM’ 2023 – உலக அழகி கிரீடத்தை வென்றார் இலங்கை பெண் நெலுனி சௌந்தர்யா

0
179

இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 20 பெண் தூதுவர்கள் அழகிகள் போட்டியில் பங்குபற்றினர். கானாவில் இடம்பெற்ற 4ஆவது MISS TEEN TOURISM – 2023 கிரீடத்தை வென்ற இலங்கையைச் சேர்ந்த நெலுனி சௌந்தர்யா இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்த போட்டி கானாவில் உள்ள அக்ரா நகரில் கடந்த 1ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாம் ரோயல் பீச் ஹோட்டலில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 20 பெண் தூதுவர்கள் அழகிகள் போட்டியில் பங்குபற்றினர்.

இவ்வாறானதொரு போட்டியில் இலங்கை முதன்முறையாக வெற்றியீட்டியுள்ளமையினால் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மிஸ் நெலுனி சௌந்தர்யா துபாயிலிருந்து இன்று காலை 05.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் இந்த நாட்டை வந்தடைந்தார்.இவரை வரவேற்க, நெக்ஸ்ட் ஈவென்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டின் தேசியப் பணிப்பாளர் திரு.சரித் குணசேகர அவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அவரது சக மாடல்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும், குறித்த போட்டியில், இந்த இறுதி கிரீடங்களைத் தவிர, பங்கேற்பாளர்களில் சிலர் பெட்ரா அமா அட்ஜெய்வா அட்ஜெய்-குமி சிறந்த தேசிய உடை, சிறந்த மாலை, ஆடை மற்றும் கானா தினத்தில் சிறந்தவர் என அனேகமான பட்டங்களையும் பெற்றனர்.

இதனடிப்படையில், நெலுனி சவுந்தர்யா, நீச்சல் உடையில் சிறந்தவர், மிஸ் டீன் நட்பு மற்றும் திறமையில் சிறந்தவர் என்ற பட்டங்களையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here