Monkeypox தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ தொழிநுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
பொரளை மருத்துவ ஆராச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைத்து Monkeypox அறிகுறிகளுடன் வருகை தருபவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்