நடிகை பாவனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடித்துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இதில் ஷெபின் பென்சன், த்ரிஷ்யா ரகுநாத், பினு பப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்.6-ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் பாவனா அளித்துள்ள பேட்டியில், மம்மூட்டி, பிருத்விராஜ் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
“மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று திடீரென்று தோன்றியதால் சில வருடங்களாக நடிக்கவில்லை. ஒருவேளை அது அவசர முடிவாக இருக்கலாம். ஆனால் அதை நிம்மதியாக உணர்ந்தேன். அப்போதும், மலையாள சினிமா நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை நடிக்க அழைத்தனர்.





