1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டப் பின்னரும் கூட அதனை உரிய முறையில் நடைமுறைக்கு கொண்டு வரத் தெரியாத பிரதேச சபை வரவு செலுவத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பயன் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருமணத்தின் போது மெட்டி அணிவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா??
நமது காலாச்சாரத்தில் மங்கை-கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், கல்யாணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த விஞ்ஞான காரணங்களும் இருக்கின்றன. நமது காலாச்சாரத்தில் மங்கை-கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், கல்யாணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருவோரை திருப்பியனுப்பும் முயற்சியில் பொலிஸார்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கொழும்புக்கு வரும் பஸ்களை திருப்பியனுப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம்
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(22) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்
அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கை நாளை (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை
நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அக்ரஹார காப்புறுதி இழப்பீடுகள் பெறுவதில் அரச ஊழியர்கள் மிகச் சிரமம்.
அரச ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் மூலம் இழப்பீடுகளை பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய உள்ளதாக அரச ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று ஏனைய நோய்கள் காரணமாக அரச ஊழியர் ஒரு நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர் இழப்பீடுகளை பெறுவதற்காக முறையான விண்ணப்பங்கள் காப்புறுதி நிறுவனத்தின் ஒப்படைக்கப்பட்ட போதிலும் தாங்கள் விண்ணப்பங்களை பெற்று கொண்டோம் என தெரிவித்து ஒரு இலக்கம் மாத்திரம் வழங்கப்படுவதாகவும் குறைபாடுகள் இருப்பின் அறிவிப்பதாக தெரிவித்த போதிலும் அதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் தொடர்பாக எவ்வித அறிவித்தலும் கிடைப்பதில்லை என்றும் இழப்பீடுகளை பெறுவதற்காக விண்ணப்பங்கள் சமர்பித்த பலர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தில் தொடர்பு கொள்வதற்காக பல தொலை பேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவற்றிக்கு அழைப்பினை ஏற்படுத்தினால் அதில் எவ்வித பயனுமில்லை எனவும் குறித்த தொலைபேசிகளில் மணி ஒலி மாத்திரம் கேட்பதாகவும் வேறு எந்த பயனுமில்லை என பலர் குற்றம் சுமத்துகின்றனர்.
அக்ரஹார காப்புறுதி நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பல வருட காலமாக தங்கம் வெள்ளி, வெண்கலம், என காப்புறுதி திட்டங்களுக்கு நிதி அறவிட படுவதாகவும் எனினும் இழப்பீடுகள் பெறப்போகும் போது எவ்வித பயனும் கிடைப்பதில்லை என்றும் இது குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த வர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பலர் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கூட நாட்டின் பிரதமர் கொவிட் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை அக்ரஹார நிறுவனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்த போதிலும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வரை இழப்பீடுகள் முறையாக கிடைப்பதில்லை எனவும் இன்னும் சிலர் தெரிவிக்கின்றனர்.
எனவே அறிவிடப்படும் நிதிக்கு முறையாக இழப்பீடுகள் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அறவீடுகளை நிறுத்த வேண்டும் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்.
உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலை.
சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி 500 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கரட் 320 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் என்பன 240 ரூபாவுக்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர கறிமிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 170 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 25 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சமையல் எரி வாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு.
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம், இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சந்தையில் எரிவாயு விலை தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு சாத்தியம் என்பவற்றை மையமாக கொண்டு ‘கேஸ் மாபியா’ க்களின் செயற்பாடுகளும் அதிகரித்து செல்கின்றன.
எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பொது மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முடிவில்லா சீரற்ற காலநிலை தொடர்கிறது நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு.
நாட்டில்ல ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் முடிவற்ற தொடர் மழை பெய்து வருகிறது இதனால் கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (15) அதிகாலை முதல் 3 அங்குலம் வரை திறந்து விடப்பட்டுள்ளன.
இதே நேரம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று காலை திறக்கப்பட்டுள்ள் பகல் மூடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ச்சி நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான், விமலசுரேந்திர பொல்பிட்டிய உள்ளிட்ட பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகள் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் சீரற்றகாலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயும் தொடர்ந்து காணப்படுவதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கு வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளன.
கே.சுந்தரலிங்கம்.