Home Blog Page 1601

தலங்கமையில் பொலிஸ் அருகில் கைக்குண்டு தாக்குதல்; மூவர் பலி!

0

 

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் பணிபுரிபவராகும். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை, முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்தநிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இதன்போது தாய் பலியாகியுள்ள நிலையில், காயமடைந்த சிறுமி வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தலவாக்கலையில் அதிகரிக்கும் மதுபான கடைகள்; மக்கள் விசனம்!

0

தலவாக்கலை நகரத்தில் மதுசாலைகளின் தொகை அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை நகரத்தின் தூரம் ஒரு கிலோ மீற்றராகும் இந்நகரம் தொடங்கும் இடத்திலிருந்து சென்கிலயர் இடம் வரை 09 மது கடைகள் கடந்த காலங்களில் இயங்கிவந்த போது தற்போது இதன் தொகை 10 ஆக அதிகரித்துள்ளது.

எந்த ஒரு மதுகடையும் மறைவான இடத்தில் இல்லை இதன் காரணமாக இந்நகரத்தில் மதுபோத்தல்களின் விற்பனையும் கலைக்கட்டி காணப்படும் இதேவேளை நாலொன்றுக்கு ஒரு மதுகடையில் 30 ஆயிரம் தொடக்கம் வியாபாரம் நடைபெறுவதாகவும் சம்பள நாட்களில் வியாபாரம் 05 லட்சம் ருபா வரை இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

தலவாக்கலை நகரத்தில் எங்கு பார்த்தாலும் பார்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றுமொறு பார் வைபவ ரீதியாக இந்நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இக்கடை பிரதான நகரத்தில் பாதையை கடக்கும் மஞ்சல் நிற கோட்டிற்கு முன்பாக திறக்கபட்டுள்ளது.

மஞ்சல் கோட்டில் செல்லும் பாடசாலை மாணவ மாணவிகள் உட்பட பெண்கள் கடந்து செல்லும் போது மது கடையை பார்க்கவேண்டும் மதுக்கடையில் வைத்து ஆண்கள் மது அருந்துவதால் பாதையில் செல்லும் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மதுகடை திறப்பதுக்கு அனுமதி வழங்கியவர்கள் எதனை அவதானித்து அனுமதி கொடுத்தார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்

அத்தோடு மலையக மக்களின் பொருளாதாரத்தினை இலக்கு வைத்து மலையக பகுதிகளில் மதுகடைகளை திறப்பது வேதனை தரும் விடயம் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தில் அமைச்சராக இருந்த தொண்டமான் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் பழணி திகாம்பரம் ஆகியோர் மது கடைகளை மூடுவதாக தெரிவித்து பல ஆர்பாட்டங்களை முன்னெடுத்தனர் அவர்களால் ஒரு மது கடையை கூட மூட நடவடிக்கை எடுக்கமுடியவில்லை மாறாக புதிதாக கடைகள் திறக்கபடுவதை தான் உணரமுடிகின்றது.

எனவே மலையக மக்கள் மீது அன்பு செலுத்துவதாக காட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகள் மலையக மக்கள் கஸ்டபட்டு
உழைக்கும் பணம் மதுகடைகளுக்கு செல்வதை கண்ணால் பார்த்துகொண்டுயிருக்கின்றார்களே தவிர அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கின்றார்களா என்பதினை சிந்திக்கவைக்கின்றது.

எனவே மலையகத்தில் மதுகடைகளை திறப்பதுக்கு அனுமதி வழங்குவதை தடைசெய்வதற்கு மலையகத்தில் உள்ள அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிரதேச மக்கள் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

கு.புஸ்பராஜ்

கொஸ்கம மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்! : வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்!

0

வெடிப்புக்கு உள்ளான கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள ஹைலெவல் வீதி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பேரூந்து, நோயாளர் காவு வண்டிகள், பிரதேசத்தில் உள்ளவர்களின் வாகனங்கள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்தினால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள வெடிப் பொருள் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமல் வீதி திறக்கப்பட்டமைக்கு எதிராகப் பிரதேச மக்கள் நேற்றைய தினம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து நேற்றிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒலிவாங்கியில் ஏற்பட்ட கோளாறு சதியல்ல! : சபாநாயகர் விளக்கம்

0

நாடாளுமன்ற ஒலிவாங்கியின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சதிச் செயல் அல்ல என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதுபோன்ற சில சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளதாக, சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த கட்டமைப்பு 15 வருடங்கள் பழைமையானது என கூறிய அவர், ஊடகங்கள் இது தொடர்பில் செய்தியிடுகையில் தவறான முறையைக் கையாண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சில ஊடகங்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போதே, மைக்ரோ போன் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக செய்தி வௌியிட்டுள்ளன. எனினும் பிரதமரிடம் வினா, எழுப்பப்படும் வேளையிலேயே இந்நிலை ஏற்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு!

0

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளால் தடுமாற்றமடைந்த அமைச்சர்கள்!

0

கொழும்பில் அமைச்சரவை முடிவினை அறிவிக்கும் மாநாட்டின் போது, அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டபோது தடுமாற்றமான பதில்களை அமைச்சர்கள் வழங்கியதை காணமுடிந்தது.

மக்கள் மீது வரிச்சுமையினை அதிகரிக்கின்றது அரசு, ஆனால் அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு சலுகைகளை வழங்குவது முறையா? என ஊடகவியலாளர்கள் கேள்விகளை அமைச்சர்களிடம் தொடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்கள் 20 வருடங்களிற்கு ஒருமுறை அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே வாகன கொள்வனவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவத்தார்கள்.

இதன் போது சரத்பொன்சேகாவினால் 7 கோடி ரூபாவிற்கு மேற்கொள்ளப்பட்ட வாகன கொள்வனவு பற்றியும் கேள்வி கேட்கப்பட்ட போது அமைச்சர்கள் உரிய பதிலினை வழங்கவில்லை.

ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்களின் பதிலாக 20 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் வாகன கொள்வனவு சந்தர்ப்பமே வழங்கப்பட்டது என்ற பதிலினையே தொடர்ந்தும் வழங்கினர்.

மக்களுக்கு வரிச்சுமை தொடர்ந்தும் அதிகரிக்கப்படும் சூழ்நிலையின்போது அமைச்சர்களின் வாகனக் கொள்வனவிற்கான சலுகை தேவையா? குறைந்த செலவில் வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறும் ஊடகவியலாளர்களினால் இங்கு கேட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொஸ்கம பாதையை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்!

0

அவிஸ்ஸாவெல – கொழும்பு பிரதான வீதியானது நேற்றைய தினம் திறந்து விடப்பட்டநிலையில் இன்று பிரதேசவாசிகள் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதையை போக்குவரத்திற்காக திறந்து விடுவதற்கு முன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக் கோரியே குறித்த பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினை பார்வையிட வருபவர்களால் தாம் பெரும்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிடிவதையினை முறையிட புதிய ஒன்லைன் முறை!

0

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர்இணைந்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது, பகிடி வதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!

0

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

காணியொன்றை முறைகேடாக விற்பனை செய்து 64 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்!

0

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.