QR முறைக்கு முடிவு ; நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலை

0
166

எரிபொருள் ஒதுக்கீடு கிவ்ஆர் முறை நீக்கப்பட்டு எரிபொருள் விற்பனை வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டவுடன், எரிபொருள் விலையை நாளாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்த யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பிரிப்பாளர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here