QR முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை!

0
143

எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

QR குறியீட்டு முறைமை அடுத்த மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அவ்வாறான எந்த தீர்மானத்தையும் தற்போது எடுக்கவில்லை.

எரிபொருள் தேவையை முழுமையாக பூர்த்திசெய்யக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில், ஒதுக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் QR குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here