பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியின் பணிப்புரைக்கமைய புத்தனை போகாவத்தை தோட்டத்துக்கான பாதையை புனரைமைக்கும் பணி இன்று (01)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தோட்ட முகாமையாளரின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை தேசிய மக்கள் சக்தியின் போகாவத்தை வட்டார அமைப்பாளரான யோகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தேசிய மக்கள் சக்தியின் போகாவத்தை வட்டார அமைப்பாளரான குணசீலனின் திட்டமிடலுக்கு அமையவும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட இந்த பாதையை புனரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களான சுதர்சிக்கா மற்றும் அறிவழகன் ஆகியோரது கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




