விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம ஓகஸ்ட் 29 அன்று உத்தரவிட்டார்,
அதே நேரத்தில் அவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தது.