சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் இருப்பு நாளைய தினம் நாட்டை வந்தடையும் எனவும் அமைச்சர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது எரிபொருள் தொகுதியை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் இருப்பு தொகுதி நாளைய தினம் நாட்டை வந்தடையும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
உள்ளூர் நிதி நிறுவனங்களிடமிருந்து அந்நியச் செலாவணிக்கான தேவைகள் இல்லாமல் விநியோகஸ்தர்கள் தங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து 12 மாத நிதியுதவியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்மூலம் அந்நிய செலாவணிக்கான நெருக்கடியும் தட்டுப்பாடும் தீர்க்கப்படும்.
மேலும், புதிய எரிபொருள் வழங்குநர்கள் உள்நாட்டு சந்தையில் நுழைவதன் மூலம் பெற்றோலிய தேவைகள் இலகுவாகும்.
எரிபொருள் நிலைய விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்டவுடன் சினோபெக் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் சில்லறை விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான சினோபெக், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமானது, நாட்டில் எரிபொருள் சில்லறை வர்த்தகத்திற்காக ஜூலை 14ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி, உரிமம் பெற்ற 45 நாட்களுக்குள் செயல்படத் தொடங்கும் திறன் Sinopec நிறுவனத்திற்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.