ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்றை நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் செயலாளாலர் தலதா அதுகோரல, ஜனாதிபதி சட்டத்தரணி ரேணோல்ட் பெரேரா உள்ளிட்டவர்களே இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும் என்பதையும் அக்கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Image – Meta AI