SLC T20 லீக் தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு!

0
3

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மூன்று அணிகளுக்கு இடையிலான SLC T20 லீக் தொடருக்கான குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்களை பொருத்தவரை டீம் புளூ அணியின் தலைவராக துனித் வெல்லாலகே, கிரீன்ஸ் அணியின் தலைவராக கமிந்து மெண்டிஸ் மற்றும் டீம் கிரேஸ் அணியின் தலைவராக சரித் அசலங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவந்த தமிழ்பேசும் வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் அணிகளில் இடம்பெற்றுள்ளனர். சிராஸ் டீம் புளூஸ் அணியிலும், வியாஸ்காந்த் டீம் கிரீன்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும் எதிர்வரும் 16ஆம் திகதி இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்தப் போட்டித்தொடரானது இம்மாதம் 7ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீம் புளூஸ்

துனித் வெல்லாலகே (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, விஷேன் ஹலம்பகே, தனன்ஜய டி சில்வா, அஹான் விக்ரமசிங்க, தசுன் ஷானக, ஜெப்ரி வெண்டர்சே, அகில தனன்ஜய, மதீஷ பத்திரண, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க, லிலன் ரங்கன, மொஹமட் சிராஸ், ரவிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, நிஷான் மதுஷ்க, செனித ஹலம்பகே

டீம் கிரீன்ஸ்

கமிந்து மெண்டிஸ் (தலைவர்), லசித் குரூஸ்புள்ளே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, சொனால் தினுஷ, சாமிக்க கருணாரத்ன. துஷான் ஹேமந்த, ட்ரவீன் மெதிவ், நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுசான், ஜனித் லியனகே, துலாஜ் சமுதித்த, தரிந்து ரத்நாயக்க, நிமேஷ் விமுக்தி, கமில் மிஷார, லஹிரு மதுசங்க

டீம் கிரேஸ்

சரித் அசலங்க (தலைவர்), தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு உதார, நுவனிது பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், சமிந்து விக்ரமசிங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்ஷன, எசான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ, கருக சங்கெத், மொவின் சுபசிங்க, மிலான் ரத்நாயக்க, மெலன் ஹன்சக, சஹான் ஆராச்சிகே, ஷெவோன் டேனியல், சினெத் ஜயவர்தன

SLC T20 லீக் தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here