இன்றுமுதல் அமுலாகும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதி 250 ரூபாவாலும், 400 கிராம் பொதி 100 ரூபாவாலும் அதிகரிப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்று 1,195 ரூபாவுக்கும், 400 கிராம் பொதியொன்று 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.