விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகப் பெருமானுக்கான ஆவணி மாத சதுர்த்தி பெருவிழா, பிரமாண்டமான முறையில் கொட்டகலையில் கொண்டாடப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கமர்சியல் வாவியில் விநாயகர் சிலைகளை விஜர்ஜனம் செய்தவற்காக 15 ஊர்களில் இருந்து விநாயகர் சிலைகள் கோலாகலமாக கொண்டு வரப்பட்டன.
பெரிய மண்வெட்டி தோட்டம்
சின்ன மண்வெட்டி தோட்டம்
ரொசிட்டா தோட்டம்
ஸ்டோனி கிளிப் தோட்டம்
ஹரிங்டன் தோட்டம்
லொக்கில் தோட்டம்
பளிங்கு மலை தோட்டம்
கல்கந்தை தோட்டம்
கொமர்சல் (தாம்புரம்)
செல்வகந்த தோட்டம்
மூங்கில் கொட்ட கலை(யு) டிவிசன்
மூங்கில் கொட்டகலை
எதன் சைட் தோட்டம்
விக்டன் தோட்டம் மற்றும் கொட்டகலை நகரில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு கொட்டகலை பிரதேச சபைக்கு அருகில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொட்டகலை கொமர்சல் வாவியில் பிற்பகல் 5.30 மணிக்கு விசர்ஜனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் சுமார் 3000ற்கும் மேற்பட்ட மக்கள் இன மத பேதமின்றி கலந்துக் கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.