சீரற்ற வானிலை காரணமாக பதுளை நாரங்கல மலை உச்சியில் சிக்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று குழுக்களை சேர்ந்த சுமார் 22 பேர் குறித்த மழை உச்சிக்கு சென்றுள்ள நிலையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அங்கேயே சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் மலை உச்சியில் அவர்கள் அமைத்திருந்த கூடாரங்களும் அடித்து செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் கங்கேகெதர காவல் பிரிவு மற்றும் இராணுவத்தின்
உதவியுடன் அவர்கள் நேற்று பிற்பகல் மீட்க்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.




