ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.
அமீரகத்தை 57 ரன்னில் முடக்கிய இந்திய அணி அந்த இலக்கை 4.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அதிவேகமாக விரட்டிப்பிடித்த இலக்கு இது தான். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதே இந்தியாவின் துரித சேசிங்காக இருந்தது.