WhatsApp பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
166

வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படத்தையும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த புதிய வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்அப் பீட்டாஇன்ஃபோ இணையதளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் பரிசோதனை முயற்சியில் உள்ளது.

தற்போது தொலைப்பேசி எண் மட்டுமே வாட்ஸ்அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here