நான்காவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும். டெஸ்ட் தொடர் ஆரம்பமாகும் குறித்த தொடரில் இலங்கை அணிக்கு மொத்தமாக 12 போட்டிகள் அமைந்துள்ளன. இதில் மூன்று தொடர்கள் சொந்த மண்ணிலும், மூன்று தொடர்கள் அந்நிய மண்ணில் நடைபெறவுள்ளன.
2019 – 2021 ல் நடைபெற்ற முதல் டெஸ்ட் சம்பியன்ஷிப்பை தொடரை நியூசிலாந்து வென்றது. 2021-2023-ல் நடைபெற்ற 2வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது. அண்மையில் நிறைவடைந்த 3வது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இந்நிலையில் 2025-27-ம் ஆண்டுக்கான 4-வது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நாளையுடன் ஆரம்பமாகி 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணிக்கு 6 அணிகளுடன் தலா இரு போட்டிகள் என மொத்தமாக 12 போட்டிகள் உள்ளன.
பங்களாதேஷ், தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுடனான தொடர் இலங்கை மண்ணிலும், நியூசிலாந்து, மே.இ.தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடர் அந்நிய மண்ணிலும் நடைபெறவுள்ளன. அடுத்த 2025 – 2027 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணிக்கு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுடன் டெஸ்ட் போட்டிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.